/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.17,000 மதிப்பு குட்கா பறிமுதல்: 3 பேர் கைது தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
/
ரூ.17,000 மதிப்பு குட்கா பறிமுதல்: 3 பேர் கைது தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
ரூ.17,000 மதிப்பு குட்கா பறிமுதல்: 3 பேர் கைது தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
ரூ.17,000 மதிப்பு குட்கா பறிமுதல்: 3 பேர் கைது தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
ADDED : செப் 27, 2024 06:18 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீசார், திருப்பாச்சூர், பாண்டூர், காரணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், போதை பொருள் விற்பனை குறித்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விடையூர் அம்பேத்கர் நகர் கடையில், சிங்கராஜ், 58, என்பவர் குட்கா விற்பனை செய்த போது கையும் களவுமாக சிக்கினார்.
அவரிடம் விசாரித்ததில், கம்மவார்பாளையத்தைச் சேர்ந்த பவுன்ராஜ், 58, என்பவருடன் சேர்ந்து, ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹான்ஸ், கூலிப் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிந்தது.
இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 10,000 ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் 1.21லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
பெண் கைது
பெரியபாளையம் அருகே, மேட்டுப்பாளையம் பகுதியில் குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசுக்குதகவல் கிடைத்தது.
பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனைமேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது, அங்கு ஒரு வெள்ளை பையில், விஐ 160, விமல், 100, கூலிப், 17, ஹான்ஸ் 7 என மொத்தம், 284 பாக்கெட் புகையிலை இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு, ரூ.7,000. இதுதொடர்பாக போலீசார் கடை உரிமையாளர்பத்மாவதியை, 55 கைது செய்து விசாரித்துவருகின்றனர்.