/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சைபர் கிரைம்' புகாரில் மீட்ட ரூ.56 லட்சம் ஒப்படைப்பு
/
'சைபர் கிரைம்' புகாரில் மீட்ட ரூ.56 லட்சம் ஒப்படைப்பு
'சைபர் கிரைம்' புகாரில் மீட்ட ரூ.56 லட்சம் ஒப்படைப்பு
'சைபர் கிரைம்' புகாரில் மீட்ட ரூ.56 லட்சம் ஒப்படைப்பு
ADDED : ஜன 09, 2025 02:48 AM
ஆவடி:ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பொதுமக்கள் சிலர், 'ஆன்லைன்' பங்கு வர்த்தகம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில், பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர்.
இது குறித்த புகாரில், 'சைபர் கிரைம்' போலீசார், பொதுமக்கள் பணம் செலுத்திய வங்கி கணக்குகளை, வங்கி உதவியுடன் முடக்கினர்.
மேலும், மோசடி நபர்கள் வங்கி கணக்கில் இருந்து மீட்கப்பட்ட பணம், 'ஆன்லைன்' வாயிலாக உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மோசடி தொடர்பாக, டிசம்பர் முதல் ஜனவரி வரை, 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பணத்தை இழந்த, 18 பேருக்கு, மொத்தம் 56.43 லட்சம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டது. அதற்கான சான்றிதழை, ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில், கமிஷனர் சங்கர் நேற்று வழங்கினார்.