/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3 ஆண்டாக கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க மனசு வரலையா ஆபீசர்ஸ்?
/
3 ஆண்டாக கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க மனசு வரலையா ஆபீசர்ஸ்?
3 ஆண்டாக கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க மனசு வரலையா ஆபீசர்ஸ்?
3 ஆண்டாக கழிவுநீர் கால்வாய் சேதம் சீரமைக்க மனசு வரலையா ஆபீசர்ஸ்?
ADDED : ஜூலை 21, 2025 02:55 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் பிராமணர் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில் பிராமணர் தெரு உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகளில், 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர், பஜார் வீதியில் உள்ள கால்வாய்க்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூன்றாண்டுகளாக சேதமடைந்துள்ளது. திறந்த நிலையில் ஓடும் கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால், அப்பகுதி மக்கள் காய்ச்சல், தொற்று நோய்க்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக புலம்புகின்றனர்.
மேலும், மழைக்காலத்தில் கழிவுநீருடன், மழைநீர் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவதால், மூன்றாண்டுகளாக சிரமப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைக்க, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.