ADDED : ஜூன் 15, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையை ஒட்டிய பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதியில் அதிகளவில் மணல் குவிந்துள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, விபத்தில் சிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், இணைப்பு சாலையில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.