/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லிப்ட் கொடுக்க மறுத்தவருக்கு அடி, உதை
/
லிப்ட் கொடுக்க மறுத்தவருக்கு அடி, உதை
ADDED : ஜூன் 30, 2025 11:16 PM
பள்ளிப்பட்டு, விளையாட்டு திடலில் இருந்து வீடு திரும்பும் போது, இருசக்கர வாகனத்தில் 'லிப்ட்' தர மறுத்தவர் மீது வாலிபர்கள் தாக்குதல் நடத்தினர்.
பள்ளிப்பட்டு அடுத்த சங்கீதகுப்பத்தைச் சேர்ந்தவர் சின்னராசு, 28. இவர், நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பராசக்தி அம்மன் கோவில் அருகே வந்த போது, வெளிகரத்தை சேர்ந்த அமரன், 27, ராஜவேல், 34, ஆகியோர், சின்னராசுவிடம் லிப்ட் கேட்டுள்ளனர்.
ஆனால், வாகனத்தில் பெட்ரோல் குறைவாக இருப்பதாக கூறி மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அமரன் மற்றும் ராஜவேல் ஆகியோர், சின்னராசுவை தாக்கியுள்ளனர். அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.