/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயரம் குறைவான 50 குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசு மருத்துவமனையில் 'ஹார்மோன்' சிகிச்சை
/
உயரம் குறைவான 50 குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசு மருத்துவமனையில் 'ஹார்மோன்' சிகிச்சை
உயரம் குறைவான 50 குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசு மருத்துவமனையில் 'ஹார்மோன்' சிகிச்சை
உயரம் குறைவான 50 குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசு மருத்துவமனையில் 'ஹார்மோன்' சிகிச்சை
ADDED : ஆக 28, 2025 01:33 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உயரம் குறைவான 50 குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'குரோத் ஹார்மோன்' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் மையம், 2016ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பிறவி குறைபாடு இங்கு, பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், குழந்தைகள் பரிசோதனை மையம், பேச்சு பயிற்சி, பிசியோதெரபி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், 'சி ஆர்ம்' என்ற 'ஸ்கேனர்' இயந்திரமும் உள்ளது.
இதில், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும், கணினி திரையில் மருத்துவர்களால் நேரடியாக கண்டறிய முடியும். மேலும், வயதுக்கு ஏற்ப வளர்ச்சிஅடையாத குழந்தைகள் வளர்வதற்காக, 'குரோத் ஹார்மோன்' ஊசி செலுத்தப்படுகிறது. இதுவரை, 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஊசி இலவசம் இது குறித்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி, மைய பொறுப்பாளர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:
பிறந்தது முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நிலை குறித்து கண்டறிய, 14 ஒன்றியங்களிலும், மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணியரை கண்காணித்து, குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை, 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 30,000 ரூபாய் மதிப்புள்ள 'குரோத் ஹார்மோன்' ஊசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
ஒருவருக்கு, ஓராண்டு சிகிச்சை அளிக்க, ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம், குழந்தைகளுக்கு இலவசமாக இந்த ஊசி செலுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சை 18 வயது வரை தொடரும். இதன் மூலம், அவர்கள் சாதாரணமாக 18 வயதிற்கு உரிய வளர்ச்சியை எட்டி விடுவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.