ADDED : பிப் 06, 2024 10:41 PM
திருத்தணி:சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி தனியார் பொறியியல் கல்லுாரியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா வரவேற்றார். இதில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, திருத்தணி தாலுகாவில் வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பித்தவர்கள், மாவட்ட கலெக்டரிடம் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்தவர்கள் என மொத்தம், 2,500 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி சந்திரன், திருவள்ளூர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழுதலைவர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். திருத்தணி தாசில்தார் மதன் நன்றி கூறினார்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் பொதட்டூர் பேட்டை பேரூராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில், இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 1907 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

