/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இத்துப்போன வண்டியை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓட்டுவீங்க!
/
இத்துப்போன வண்டியை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓட்டுவீங்க!
இத்துப்போன வண்டியை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓட்டுவீங்க!
இத்துப்போன வண்டியை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓட்டுவீங்க!
ADDED : அக் 19, 2025 10:17 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், 13 ஆண்டுகள் பழமையான போலீசார் ரோந்து வாகனம் துருப்பிடித்து, படுமோசமான நிலையில் இயங்கி வருகிறது.
கும்மிடிப்பூண்டி காவல் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனம், 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரு எஸ்.ஐ., ஒரு ஓட்டுநர், மூன்று போலீசார் என, மொத்தம் ஐந்து பேர் கொண்ட இரு குழுவினர், 24 மணி நேரத்திற்கு ஒரு குழு என்ற சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாகனம், ஆரம்பாக்கம் - பஞ்செட்டி வரையிலான, 25 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை கண்காணித்து வருகிறது.
ஆனால், அவசர தேவைக்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பயன்படாத நிலையில் உள்ளது. கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் அறிமுகமான, 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை, ஒரே வாகனம் தான் இயங்கி வருகிறது.
இந்த வாகனம் பல இடங்களில் துருப்பிடித்து, பழைய இரும்பு கடைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. அடிக்கடி பழுதாகும் கதவுகளை முழுமையாக மூட முடியாது. ஓட்டுநர் அருகே உள்ள ஜன்னலுக்கு கண்ணாடி கிடையாது.
வேறு வழியின்றி, அந்த வாகனத்தையும் போலீசார் உருட்டிக்கொண்டு செல்கின்றனர்.
எனவே, உடனே ரோந்து வாகனத்தை அப்புறப்படுத்தி, புதிய வாகனம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.