/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் மீது லாரி மோதி விபத்து மனைவி கண்முன் கணவர் பலி
/
பைக் மீது லாரி மோதி விபத்து மனைவி கண்முன் கணவர் பலி
பைக் மீது லாரி மோதி விபத்து மனைவி கண்முன் கணவர் பலி
பைக் மீது லாரி மோதி விபத்து மனைவி கண்முன் கணவர் பலி
ADDED : ஜூலை 07, 2025 11:28 PM
திருவள்ளூர், பைக் மீது சவுடு மண் லாரி மோதிய விபத்தில், மனைவி கண்முன் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த சீயான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 67. இவரது மனைவி ஜெகதீஸ்வரி, 63. இவர், சில நாட்களாக திருவள்ளூர் ஜெயாநகரில் உள்ள மகன் நரேஷ், 38, வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று காலை 10:30 மணியளவில், 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' பைக்கில், மனைவியுடன் காய்கறி வாங்குவதற்காக, திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உழவர் சந்தை அருகே, கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் ஏரியில் உள்ள குவாரிக்கு சவுடு மண் ஏற்றுவதற்காக டிப்பர் லாரி, பைக்கின் பின்னால் மோதியது.
இதில், லோகநாதன் நிலை தடுமாறி கீழே விழுந்தத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி மனைவி கண்முன் பலியானார். மனைவி படுகாயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

