/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம் திறப்பு
/
கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம் திறப்பு
ADDED : மார் 08, 2024 10:19 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி - என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, இருந்த தரைப்பாலம், கடந்த, 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால், 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் நான்கு மாதங்களாக தவித்து வந்தனர். தொடர்ந்து தற்காலிக தரைப்பாலம் அமைத்தும் வாகனங்கள் விடப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் கனமழையின் போது தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதால், கடந்த, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை கோட்டங்களின் நெடுஞ்சாலை துறையின் சார்பில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது.
தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு பின் உயர்மட்ட பாலப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நெமிலி - என்.என்.கண்டிகை கொசஸ்தலை ஆற்றின் உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்தார்.

