/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிச்சாட்டூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பிச்சாட்டூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 17, 2024 10:52 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் ஆரணி ஆற்றில் நடுவே, பிச்சாட்டூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இதன் மொத்த கொள்ளவு, 1.85 டி.எம்.சி., நீர்மட்டம், 28 அடி. மழைநீர் இதன் முக்கிய நீர் ஆதாரம். வங்கக் கடலில் உருவாகன புயல் சின்னம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையில் பலத்த மழை பெய்து வருகிறது. பிச்சாட்டூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இரு தினங்களாக மழை விடிய, விடிய வெளுத்து வாங்கியது.
இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 3,420 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை முதல் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது.
மதியம், 12:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 870 கன அடியாக குறைந்தது. ஏரியில் தற்போது, 0.818 டி.எம்.சி., நீர் உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் உபரிநீர் ஆரணி ஆற்றில் கலந்து ஊத்துக்கோட்டையை அடையும்.