/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சோலார் பேனல் அமைத்தால் மின் கட்டணத்தை சேமிக்கலாம்'
/
'சோலார் பேனல் அமைத்தால் மின் கட்டணத்தை சேமிக்கலாம்'
'சோலார் பேனல் அமைத்தால் மின் கட்டணத்தை சேமிக்கலாம்'
'சோலார் பேனல் அமைத்தால் மின் கட்டணத்தை சேமிக்கலாம்'
ADDED : நவ 24, 2025 04:08 AM
திருவாலங்காடு: 'பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில், வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதன் மூலம் மின் கட்டணத்தை சேமிக்கலாம்' என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய பொறியாளர் கூறியதாவது:
சோலார் பேனல் அமைப்பதால், வீட்டிற்கான மின்சார தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும். மத்திய அரசு திட்டத்தில், 2022 முதல் வீடுகளுக்கு மானிய விலையில் சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு கிலோவாட் சோலார் பேனல் அமைக்க, 30,000 ரூபாய், 2 கிலோவாட்டிற்கு 60,000 ரூபாய், 3 கிலோவாட்டிற்கு மேல் 78,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மாதம் 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் உபயோகிக்கும் குடும்பங்கள், 1,250 ரூபாய் வரை மின் கட்டணத்தில் சேமிக்க முடியும்.
மின் கட்டண ரசீது வைத்திருப்போர் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

