/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரை சுத்தப்படுத்த ஒரு நாள் போதுமா? ஒட்டுமொத்த 'கிளீனிங்'கில் ஈடுபட்டோருக்கு கேள்வி

ADDED : செப் 25, 2024 01:02 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் நேற்று சுகாதார ஊழியர்கள், ஒட்டுமொத்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி தொடருமா அல்லது ஒரு நாள் கூத்தா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பை என, 45 ஆயிரம் டன் குவிகிறது. இந்த குப்பையை அகற்ற, நகராட்சி மற்றும் தனியார் ஊழியர்கள், 210க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும், வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பையை தனியார் ஊழியர்கள் நேரடியாக சென்று, சேகரித்து வருகின்றனர். இருப்பினும், பொதுமக்கள் சிலர், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், தெருக்களில் வீசி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், நகரவாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், நேற்று, ஒன்றாவது வார்டு பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், டோல்கேட், ஜெ.ஜெ.நகர், ஐ.சி.எம்.ஆர்., ஆகிய பகுதிகளில், துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வார்டில் ஒரு நாளில் நடந்த துப்புரவு பணி, அனைத்து வார்டுகளிலும் தொடருமா அல்லது இந்த ஒரு நாளுடன் இப்பணி முடிவடையுமா என, சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.