/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.85,000 கையாடல் ஐ.டி., மேலாளர் கைது
/
ரூ.85,000 கையாடல் ஐ.டி., மேலாளர் கைது
UPDATED : மார் 16, 2025 01:35 AM
ADDED : மார் 15, 2025 09:36 PM
மணவாள நகர்:திருவள்ளூரில் உள்ள போளிவாக்கம் சத்திரம் 'ஸ்டார் பாக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' கம்பெனியில் திருவேலன், 57, என்பவர் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்த கம்பெனிக்கு வயலுார், ஒரகடம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் துணை கம்பெனிகள் உள்ளன.
இதில், வயலுார் பகுதியில் உள்ள துணை கம்பெனியான 'ஆஸ்டம் ஸ்டம்பிங்' கம்பெனியில், கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கு தகவல் தொழில்நுட்ப துறை தலைவராக பணிபுரிந்து வந்த, சென்னை பெருங்களத்துாரைச் சேர்ந்த சவுரிஸ்குமார், 45, என்பவர், கம்பெனிக்கு தேவையான பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியது போல் பதிவு செய்து, மூன்றாண்டுகளாக ஏமாற்றி 85,000 ரூபாய் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சவுரிஸ்குமாரிடம் விசாரித்த போது, இயக்குனர் திருவேலனை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருவேலன், நேற்று முன்தினம் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், சவுரிஸ்குமாரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.