/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டி முடித்து நான்கு மாதமாச்சு! விரைவில் திறப்பு விழா நடக்குமா?
/
கட்டி முடித்து நான்கு மாதமாச்சு! விரைவில் திறப்பு விழா நடக்குமா?
கட்டி முடித்து நான்கு மாதமாச்சு! விரைவில் திறப்பு விழா நடக்குமா?
கட்டி முடித்து நான்கு மாதமாச்சு! விரைவில் திறப்பு விழா நடக்குமா?
ADDED : மே 15, 2025 12:01 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூரில், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் ஜே.எஸ்.ராமாபுரம், சின்னகளக்காட்டூர், பெரியகளக்காட்டூர் கிராமங்களில் இருந்து, 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளி கட்டடம் 2019ம் ஆண்டு சேதமடைந்ததால், ஐந்து ஆண்டுகளாக மாணவர் விடுதியில், தற்காலிகமாக பள்ளி செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் புதிய பள்ளி கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்தாண்டு புதிய பள்ளி கட்டடம் கட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில், இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது, நான்கு மாதங்களான நிலையில் திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜூன் மாதம் புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், அதற்கு முன் புதிய பள்ளி கட்டடம் திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.