/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜேப்பியார் பல்கலை வாலிபாலில் 'சாம்பியன்'
/
ஜேப்பியார் பல்கலை வாலிபாலில் 'சாம்பியன்'
ADDED : செப் 26, 2024 06:07 AM

சென்னை: மாநில வாலிபால் போட்டி, திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் இரண்டு நாட்கள் நடந்தன. அதில், 20க்கும் மேற்பட்ட கல்லுாரி, கிளப் மற்றும் அகாடமி அணிகள் பங்கேற்றன.
போட்டிகள், லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்தன. இதில், அரையிறுதி ஆட்டத்தில், சென்னை ஜேப்பியார் பல்கலை அணி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.
அதில், 25 - 22, 25 - 15 என்ற கணக்கில் ஜேப்பியார் பல்கலை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில், ஜேப்பியார் பல்கலை மற்றும் சாய் மயிலாடுதுறை அணிகள் மோதின.
விறுவிறுப்பான போட்டியில், 27 - 25, 20 - 25, 25 - 22 என்ற கணக்கில் ஜேப்பியார் பல்கலை வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.