/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 24ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
/
திருவள்ளூரில் 24ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜன 21, 2025 07:05 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுதினம், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை மறுதினம், காலை 10:00 மணியளவில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று, 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்', கணக்காளர், டெக்னீஷியன், மிஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான வாய்ப்பினை பெற்று பயனடையலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.