sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

காக்களூர் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் அவலம்

/

காக்களூர் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் அவலம்

காக்களூர் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் அவலம்

காக்களூர் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் கற்கும் அவலம்


ADDED : ஜூலை 05, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காக்களூர்:காக்களூர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் குறுகலாக உள்ளதால், இடநெருக்கடி காரணமாக, மாணவர்கள் மரத்தடியில் பயின்று வருகின்றனர்.

திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சி, திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

சாலையோரம் அமைந்துள்ள இப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில், மாணவ - மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லை. வகுப்பறை குறுகலாக உள்ளதால், இடநெருக்கடியில் மாணவ - மாணவியர் சிரமத்துடன் பயின்று வருகின்றனர்.

குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் பாடங்கள் ஒருங்கிணைத்து கற்பிக்கப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர், குறுகலான வகுப்பறையில் அமர்ந்து பயில முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தற்காலிக ஏற்பாடாக பள்ளி ஆசிரியர்கள், ஒருங்கிணைந்து செயல்படும் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ - மாணவியரை, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமரவைத்து, பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

மழை, வெயில் காலத்தில் மரத்தடியில் பயிலும் மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, விசாலமான இடவசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us