/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகவல்லிபுரம் சாலை சேதம் கிராமவாசிகள் தடுமாற்ற பயணம்
/
கனகவல்லிபுரம் சாலை சேதம் கிராமவாசிகள் தடுமாற்ற பயணம்
கனகவல்லிபுரம் சாலை சேதம் கிராமவாசிகள் தடுமாற்ற பயணம்
கனகவல்லிபுரம் சாலை சேதம் கிராமவாசிகள் தடுமாற்ற பயணம்
ADDED : மே 10, 2025 02:45 AM

பொன்னேரி:பொன்னேரி - அரசூர் மாநில நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி கிராமத்தில் இருந்து கனகவல்லிபுரம் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலை முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.கனகவல்லிபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளுக்கு, இச்சாலை வழியே கிராமவாசிகள் பொன்னேரி சென்று வருகின்றனர்.
சாலை சேதமடைந்து இருப்பதால், தடுமாற்றமான பயணம் மேற்கொள்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலை பள்ளங்கள் மற்றும் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்களில் சிக்கி சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர்.
உயர்கல்வி செல்ல மிதிவண்டிகளில் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரும் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே, இச்சாலையை சீரமைக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.