/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகியதால் சிரமம்
/
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகியதால் சிரமம்
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகியதால் சிரமம்
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகியதால் சிரமம்
ADDED : ஆக 10, 2025 12:35 AM
கும்மிடிப்பூண்டி:சாலையோர ஆக்கிரமிப்புகளால், கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலை குறுகியுள்ளதால், ரயில் பயணியர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், 300க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த சாலையை, பல்லாயிரக்கணக்கான ரயில் பயணியர், தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகளால், சாலை குறுகி, கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலைய சாலை நுழையும் இடத்தில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பழக்கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், 8 அடி சாலையாக குறுகியுள்ளது.
இதனால், பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில், ரயில் நிலைய சாலைக்குள் நுழைய முடியாமல், ரயில் பயணியர் தவித்து வருகின்றனர். குறித்த நேரத்திற்கு ரயில் நிலையம் செல்ல முடியாமல், ரயிலை தவற விட நேரிடுவதாக ரயில் பயணியர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
'ரயில் நிலைய சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, கவரைப்பேட்டை போலீசார் அகற்ற வேண்டும்; சாலையை விரிவாக்கம் செய்ய, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.