/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் குழந்தை கடத்த முயற்சி? வடமாநில தொழிலாளருக்கு தர்ம அடி
/
கும்மிடியில் குழந்தை கடத்த முயற்சி? வடமாநில தொழிலாளருக்கு தர்ம அடி
கும்மிடியில் குழந்தை கடத்த முயற்சி? வடமாநில தொழிலாளருக்கு தர்ம அடி
கும்மிடியில் குழந்தை கடத்த முயற்சி? வடமாநில தொழிலாளருக்கு தர்ம அடி
ADDED : மார் 13, 2024 11:03 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் அருகே, நேற்று முன்தினம் மாலை சாலையில் நடந்து சென்ற வடமாநில வாலிபர் ஒருவர் மொபைல் போனில் படம் பிடித்தபடி சென்றுள்ளார்.
எதிரே பெண் ஒருவர் தன் குழுந்தையை பள்ளியில் இருந்து அழைத்து சென்றார். தன் குழந்தையை மொபைல் போனில் படம் பிடிப்பதாக கருதிய அப்பெண், வடமாநில நபரிடம் தகராறு செய்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் பெண்ணிடம் விசாரித்த பின், வடமாநில நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதையடுத்து, அந்த வடமாநில வாலிபரின் புகைப்படம், அவரை போலீசார் அழைத்து செல்லும் வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.
அந்த பதிவில் கும்மிடிப்பூண்டியில் குழந்தைகள் கடத்தும் கும்பலின் கைவரிசை, பெற்றோர்களே உஷாராக இருங்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ கும்மிடிப்பூண்டி முழுதும் பரவியது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் கூறியதாவது:
அந்த வடமாநில நபர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வசிஸ்ட்குமார் சவுகான், 27. கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், 'செல்பி' எடுத்தபடி சாலையில் நடந்து சென்றது தெரியவந்தது. எதிரே வந்த பெண் தன் குழந்தையை படம் பிடிப்பதாக தவறாக எண்ணியதால் பிரச்னையானது.
உடனே, இந்த சம்பவத்தை குழந்தை கடத்தலுடன் தொடர்புபடுத்தி சில விஷமிகள் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகின்றனர். விசாரணைக்கு பின், வடமாநில வாலிபர் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

