/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்டலேறு அணையில் கிருஷ்ணா நீர் திறப்பு
/
கண்டலேறு அணையில் கிருஷ்ணா நீர் திறப்பு
ADDED : செப் 22, 2024 12:24 AM
ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை ஆகியவற்றில் நீர் இருப்பு குறைவாக இருந்தது.
இதனால் ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து கடந்த, 19ம் தேதி காலை 11:00 மணிக்கு, வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டது.
பின் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு, 1,100 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டு, சாய்கங்கை கால்வாய் வாயிலாக தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று மதியம், 1:00 மணி நிலவரப்படி, கண்டலேறு அணையில் இருந்து 80 கி.மீ., துாரத்தில் உள்ள காளஹஸ்தி பகுதியில் உள்ள கால்வாயில் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் மீதமுள்ள, 72 கி.மீட்டர் துாரத்தை கடந்து நாளை, 23ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் சாய்கங்கை கால்வாயில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.