/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி ஏ.ஆர்.எஸ்., குழுமம் பரிசு வழங்கி பாராட்டு
/
கும்மிடி ஏ.ஆர்.எஸ்., குழுமம் பரிசு வழங்கி பாராட்டு
கும்மிடி ஏ.ஆர்.எஸ்., குழுமம் பரிசு வழங்கி பாராட்டு
கும்மிடி ஏ.ஆர்.எஸ்., குழுமம் பரிசு வழங்கி பாராட்டு
ADDED : அக் 19, 2024 12:53 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.எஸ் குழுமம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் ஏ.ஆர்.எஸ்., ஸ்டீல்ஸ் அண்ட் அலாய் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏ.ஆர்.எஸ்., எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என அக்குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தொழிற்சாலைகள் வாயிலாக பல்வேறு சமூக நலப்பணி செய்யப்படுகிறது.
அந்த வகையில் தொழிற்சாலைகளை சுற்றி உள்ள சித்தராஜ கண்டிகை, ஈகுவார்பாளையம் மற்றும் மாதர்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்து 2024 ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏ.ஆர்.எஸ் குழுமம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வனி குமார் பாட்டியா மற்றும் இயக்குனர் ராஜேஷ் பாட்டியா ஆகியோர் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர்கள் சத்தியநாராயண மூர்த்தி, சேகர், நிதி இயக்குனர் பிரபு, பொது மேலாளர் மீரா ரெட்டி, மனித வள மேம்பாட்டு துறை பொது மேலாளர் சுபாஷினி சுதாகர், நிதி துறை பொது மேலாளர் வளர்மதி, தகவல் தொழில்நுட்ப துறை உதவி பொது மேலாளர் பாபுலால், ஆகியோர் பங்கேற்றனர். பரிசு பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.