/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி வாலிபரை துரத்தி சென்ற டிரைவர் கும்மிடிப்பூண்டி பஜார் ஸ்தம்பிப்பு
/
நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி வாலிபரை துரத்தி சென்ற டிரைவர் கும்மிடிப்பூண்டி பஜார் ஸ்தம்பிப்பு
நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி வாலிபரை துரத்தி சென்ற டிரைவர் கும்மிடிப்பூண்டி பஜார் ஸ்தம்பிப்பு
நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி வாலிபரை துரத்தி சென்ற டிரைவர் கும்மிடிப்பூண்டி பஜார் ஸ்தம்பிப்பு
ADDED : செப் 28, 2024 01:30 AM

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் சத்தியவேடில் இருந்து மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக பொன்னேரி நோக்கி, 80க்கும் மேற்பட்ட பயணியருடன், தடம் எண்: '112பி' என்ற அரசு பேருந்து நேற்று காலை சென்றது. மீஞ்சூரைச் சேர்ந்த விஜய், 28, என்பவர் ஓட்டி சென்றார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலத்தின் ஏற்றத்தில் பாரம் தாங்காமல் பேருந்து மெதுவாக சென்றது. தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் காரணமாக, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியிலும் பேருந்து மெதுவாக செல்ல நேரிட்டது.
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், 'வேலைக்கு நேரமாகுது; வேகமாக செல்லவும்' என தெரிவித்து, ஓட்டுனருடன் தகராறு செய்துள்ளார். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் எதிரே பேருந்து நின்றபோது, ஓட்டுனர் விஜயிடம் மீண்டும் தகராறு செய்து, அவரை பலமாக தாக்கிவிட்டு தப்பியோடினார்.
பேருந்தை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு, தப்பியோடிய நபரை விரட்டியபடி ஓட்டுனர் விஜய் சென்றார். நீண்ட நேரமாகியும் ஓட்டுனர் திரும்பவில்லை.
அவ்வழியாக சென்ற இரு அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், தகவல் அறிந்து பேருந்துகளை அப்படியே நிறுத்தினர். இதனால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார், பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். விரட்டி சென்ற ஓட்டுனர் விஜய், 30 நிமிடங்கள் கடந்து, தாக்கி ஓடிய பயணியை பிடிக்க முடியாமல் திருப்பினார்.
பின், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலால், வலது கண் அருகே காயம் அடைந்த விஜய், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்ச பெற்றார்.
பரபரப்பான காலை நேரத்தில், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், 30 நிமிடங்கள் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.