/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குத்தகை ஏலம் வரும் 26க்கு ஒத்திவைப்பு
/
குத்தகை ஏலம் வரும் 26க்கு ஒத்திவைப்பு
ADDED : மார் 22, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2025 - 26ம் நிதியாண்டுக்கான பேருந்து, வேன் மற்றும் ஆட்டோக்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிம ஏலம், பேருந்து நிலைய கழிப்பிட கட்டண வசூல் உள்ளிட்ட குத்தகை பொது ஏலங்கள், நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது.
நிர்வாக காரணங்களால் பொது ஏலம் ரத்து செய்யப்பட்டது. வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு பொது ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.