/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சத்தரை மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை
/
சத்தரை மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை
ADDED : ஜன 24, 2025 01:26 AM

கடம்பத்துார்:நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ல் பெய்த கனமழையில், கடம்பத்துார் ஒன்றியம் சத்தரை ஊராட்சியில், கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இப்பகுதியைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, கூவம் ஆற்றின் குறுக்கே, 2016, ஜூன் மாதம், 'நபார்டு' திட்டத்தின் கீழ், 4.5 கோடி ரூபாய் மதிப்பில், 115 மீட்டர் நீளம் மற்றும் 7.5 மீட்டர் அகலத்தில், புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கி, 2021ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது.
பணிகள் நிறைவடைந்து நான்கு ஆண்டுகளாக இந்த பாலத்திற்கு செல்லும் இணைப்பு சாலை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, கடம்பத்துார் ஒன்றியத்தில், 2024 - 25ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானியத்தின்கீழ் சத்தரை பேருந்து நிறுத்தம் முதல் மேம்பாலம் வரை, 3.87 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

