தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குப்பை கிடங்காக மாறி வரும் இணைப்பு சாலை: தொற்றுநோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள்

குப்பை கிடங்காக மாறி வரும் இணைப்பு சாலை: தொற்றுநோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள்

குப்பை கிடங்காக மாறி வரும் இணைப்பு சாலை: தொற்றுநோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜன 04, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2025 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமழிசை:சென்னை-பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையினை 6 வழி சாலையாக விரிவாக்கும் பணி, 2018 இறுதியில் தொடங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.

இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில் இருவழிப்பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு சாலை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, திருமழிசை, குத்தம்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபேடு, பாப்பன்சத்திரம், தண்டலம், இருங்காட்டுகோட்டை உட்பட பல பகுதிகளில் இணைப்பு சாலை பகுதி குப்பை கிடங்காக மாறி வருகிறது.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இணைப்பு சாலையில் செல்லும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து குப்பையை அகற்றவும்,குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us