/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கள்ள சந்தையில் மது விற்றவர் கைது
/
கள்ள சந்தையில் மது விற்றவர் கைது
ADDED : ஆக 24, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், 45, என்பவர் மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் 28 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.