/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை பராமரிப்புக்கு ரூ.2 லட்சம் கடன் வழங்கல்
/
கால்நடை பராமரிப்புக்கு ரூ.2 லட்சம் கடன் வழங்கல்
ADDED : ஜூலை 05, 2025 10:33 PM
திருவாலங்காடு:கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் பராமரிப்புக்கு, விவசாயிகளின் கடன் அட்டை மூலமாக, 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் பயன் பெற, விவசாயிகள் கடன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பசு, எருமை உள்ளிட்ட கறவை மாடுகள் பராமரிப்புக்காக, ஆண்டுக்கு 14,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் சிறு கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் சிலர், கடன் பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட விவசாயிகள், சிறு கடன் பெற விண்ணப்பித்தால், அவர்கள் வைத்திருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை, நிலப்பரப்பு உள்ளிட்ட விபரங்களை கால்நடை மருத்துவர் உறுதி செய்வார்.
பின், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படும்.
ஆறு மாதங்களில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். 2 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும். இதில், நிலம் இல்லாத விவசாயிகள் கூட பயன்பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.