/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுாரில் துணை மின்நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
புட்லுாரில் துணை மின்நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
புட்லுாரில் துணை மின்நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
புட்லுாரில் துணை மின்நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : மே 18, 2025 10:11 PM
புட்லுார்:திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது புட்லுார் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு அருகில் திரூர், அரண்வாயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் பல ஆண்டுகளாக மின்வெட்டு பிரச்னை நீடிக்கிறது. அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், கிராமவாசிகள் பயன்படுத்தும் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன.
இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல், கடும் புழுக்கம் காரணமாக முதியோர், கர்ப்பிணியர், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் துாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தங்கள் கிராமத்திற்கு தனி துணை மின் நிலையம் அமைத்தால் மின் பிரச்னை தீரும் என, மின்வாரியத்திற்கு கிராமவாசிகள் மனு அளித்தனர். இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், புட்லுார் கிராமத்தில் மந்தைவெளி வகைப்பாடு கொண்ட இடத்தை தேர்வு செய்தது.
அந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க தற்போது வரை மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மின் பிரச்னை தொடர்வதால், கிராமவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, புட்லுார் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைத்து, மின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.