/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல்போல் காட்சியளிக்கும் காக்களூர் ஏரி படகு சவாரி விட பகுதியினர் எதிர்பார்ப்பு
/
கடல்போல் காட்சியளிக்கும் காக்களூர் ஏரி படகு சவாரி விட பகுதியினர் எதிர்பார்ப்பு
கடல்போல் காட்சியளிக்கும் காக்களூர் ஏரி படகு சவாரி விட பகுதியினர் எதிர்பார்ப்பு
கடல்போல் காட்சியளிக்கும் காக்களூர் ஏரி படகு சவாரி விட பகுதியினர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 30, 2025 02:16 AM

திருவள்ளூர்:கடல் போல் காட்சியளிக்கும் காக்களூர் ஏரியில் சுற்றுலா துறை சார்பில் படகு தலம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகரில், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கும் வகையிலான எந்த வசதியும் இல்லை. அதற்காக, திருவள்ளூர் மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்தேக்கத்திலும், குழந்தைகள் விளையாட அமைக்கப்பட்ட பூங்கா, முற்றிலும் சேதமடைந்து, சீரமைக்காமல் உள்ளது.
திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம், 100 ஏக்கர் பரப்பளவில், காக்களூர் ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீர், கடந்த 30 ஆண்டுக்கு முன் விவசாயத்திற்கு பயன்பட்டது. தற்போது, விவசாய நிலங்கள் அனைத்தும் வீடுகளாக மாறியதால், நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக திகழ்கிறது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், காக்களூர் ஏரியில் உள்ள, ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தி துார் வாரி, ஏரியைச் சுற்றி, 4 கி.மீ., துாரத்திற்கு, நடை பயிற்சி பாதை அமைக்கப்பட்டது.
தற்போது அந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல் கட்சியளிக்கிறது. காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோரும், பகுதிவாசிகளும் ஓய்வெடுத்து வருகின்றனர்.
நகரில் பொழுது போக்கு பூங்கா எதுவும் இல்லாத நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ஏரியை சீரமைத்து, படகு தலம் அமைக்க சுற்றுலா துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பகுதிவாசிகளுக்கு பொழுதுபோக்கவும் உதவும். இதன் மூலம், அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.