/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டுடைத்து பணம், நகை 'ஆட்டை'
/
வீட்டின் பூட்டுடைத்து பணம், நகை 'ஆட்டை'
ADDED : நவ 10, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியபாளையம் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 60. இவரது மனைவி நாகலட்சுமி. மாணிக்கம், நாகலட்சுமி ஆகியோர், நேற்று முன் தினம் ஆந்திராவின் நாராயணவனம் சென்றனர். நேற்று நாகலட்சுமி மட்டும் வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 70,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

