/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தளவாட பூங்கா பணி 3 மாதத்தில் முடியும்
/
தளவாட பூங்கா பணி 3 மாதத்தில் முடியும்
ADDED : நவ 15, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 1,500 கோடி ரூபாயில், 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்' என்ற பல்வகை தளவாடப் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவில், கிடங்குகள், குளிர்பதன கிடங்கு, சுங்க வசதி, சரக்கு, லாரி முனையங்கள் போன்ற பல வசதிகள் இருக்கும்.
இந்த திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. முதற்கட்டமாக, 600 கோடி ரூபாயில் கட்டமைக்கும் பணிகள் வரும் பிப்ரவரியில் முடியும். மீதமுள்ள அனைத்து பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது, 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சுனில் பாலிவால்,
சென்னை துறைமுக தலைவர்

