/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூரில் பராமரிப்பின்றி தாமரை குளம் நடைபாதை
/
காக்களூரில் பராமரிப்பின்றி தாமரை குளம் நடைபாதை
ADDED : ஜன 26, 2025 02:40 AM

திருவள்ளூர்:காக்களூர் தாமரைக்குளத்தின் நடைபாதையில் செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது.
திருவள்ளூர் - ஆவடி மாநில நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது காக்களூர் தாமரைக்குளம். மொத்தம், 5.6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் நிரம்பும் மழைநீரால், அருகில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது.
பராமரிப்பின்றி காட்சியளித்த இந்த குளத்தினை, 2019ல் தனியார் நிறுவனம் வாயிலாக, துார்வாரி சீரமைக்கப்பட்டது. குளக்கரையைச் சுற்றிலும், நடைபயிற்சிக்கு ஏதுவாக பாதை அமைத்து சிமென்ட் கல் பதிக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்கள் அமரும் வகையில், இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குளத்தினை முறையாக பராமரிக்காததால், நடைபாதை முழுதும் செடிகள் வளர்ந்து உள்ளன. அந்த நடைபாதைக்கு அருகிலேயே சிலர் குப்பை, கோழி இறைச்சி கழிவை கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர்.
இதனால், காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு செல்வோர் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு, பயிற்சியினை கைவிட்டுள்ளனர்.
எனவே, ஒன்றிய நிர்வாகம், நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, குப்பை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.