/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூரில் குறைந்த மின்னழுத்தம் சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
/
காக்களூரில் குறைந்த மின்னழுத்தம் சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
காக்களூரில் குறைந்த மின்னழுத்தம் சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
காக்களூரில் குறைந்த மின்னழுத்தம் சேதமடைந்த மின்சாதன பொருட்கள்
ADDED : ஏப் 29, 2025 11:33 PM
காக்களூர், காக்களூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரம் வருவதால், மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருகின்றன.
திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சியில், காக்களூர், பூங்கா நகர், ஆஞ்சநேயர்புரம், பாக்கியம் நகர், மாருதி நகர், நியூ டவுன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.
இங்கு, 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், அங்குள்ள 329 ஏக்கர் பரப்பளவிலான தொழிற்பேட்டையில், 360 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இப்பகுதிவாசிகளுக்கும், தொழிற்பேட்டைக்கும், காக்களூர் தொழிற்பேட்டை அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரே இடத்தில் இருந்து மின்சாரம் வினியோகிப்படுகிறது. இதனால், மின்பற்றாக்குறை அப்பகுதியில் நிலவி வருகிறது.
தற்போது, கோடைக்காலம் என்பதால், வீடுகளில் மின்தேவை அதிகரித்து வருகிறது. பலரும் குளிர்சாதன வசதியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மின்விசிறி, 'ஏசி' போன்றவற்றின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
ஆனால் அதற்கு தேவையான மின் வினியோகம் இல்லாததால், கடந்த ஒரு வாரமாக, அப்பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் நிலவி வருகிறது.
மூன்று நாட்களுக்கு முன், காக்களூர் ஆஞ்சநேயர்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில், குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில், மின்சாரம் அதிகமானதால், பல வீடுகளில் மின்விசிறி, 'வாஷிங்மிஷின், பிரிஜ்' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். எனவே, காக்களூர் துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்படும் மின் விநியோகித்தை சீராக வழங்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.