/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐ.ஐ.டி.,யில் வாலிபால் போட்டி லயோலா கல்லுாரி 'சாம்பியன்'
/
ஐ.ஐ.டி.,யில் வாலிபால் போட்டி லயோலா கல்லுாரி 'சாம்பியன்'
ஐ.ஐ.டி.,யில் வாலிபால் போட்டி லயோலா கல்லுாரி 'சாம்பியன்'
ஐ.ஐ.டி.,யில் வாலிபால் போட்டி லயோலா கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : நவ 03, 2025 10:30 PM

சென்னை:  ஐ.ஐ.டி.,யில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், சென்னை லயோலா கல்லுாரி அணி, ஹிந்துஸ்தான் கல்லுாரியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.
கிண்டியில் உள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி., சார்பில், 2025ம் ஆண்டிற்கான விளையாட்டு திருவிழா நடக்கிறது. இதில், கூடைப்பந்து, வாலிபால், பளு துாக்குதல் உள்ளிட்ட 12 வகை போட்டிகள் நடக்கின்றன.
வாலிபாலில், லயோலா, ஹிந்துஸ்தான், ஒய்.எம்.சி.ஏ., - ஐ.ஐ.டி., அணிகள் இறுதி லீக் சுற்றுகளுக்கு தகுதி பெற்றன. புள்ளிகள் அடிப்படையில், லயோலா மற்றும் ஹிந்துஸ்தான் கல்லுாரி அணிகள், இறுதிப் போட்டியில் மோதின. அதில், 25 - 16, 21 - 25, 25 - 21, 25 -18 என்ற செட் கணக்கில், லயோலா கல்லுாரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றியது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், ஒய்.எம்.சி.ஏ., அணி, 25 - 18, 21 - 25, 25 - 19, 25 - 23 என்ற செட் கணக்கில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணியை வென்றது.