/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் மத்துார் ஊராட்சி சேவை மையம்
/
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் மத்துார் ஊராட்சி சேவை மையம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் மத்துார் ஊராட்சி சேவை மையம்
பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் மத்துார் ஊராட்சி சேவை மையம்
ADDED : மே 10, 2025 02:59 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சியில் கொத்துார் செல்லும் சாலையோரம், ஆறு ஆண்டுகளுக்கு முன் 15.75 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி கிராம சேவை மைய கட்டடம் கட்டப்பட்டது.
இக்கட்டடத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் கூட்டம், பயிற்சி, இ - சேவை மையம் மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் பராமரிக்க ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், சேவை மைய கட்டடம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே உள்ளது. ஊராட்சி நிர்வாகம் முறையாக கட்டடத்தை பராமரிக்காததால் செடிகள் வளர்ந்தும், சில சமூக விரோதிகளின் கூடரமாகவும் மாறியுள்ளது. இரவு நேரத்தில் 'குடி'மகன்கள் மதுக்கூடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
சேவை மைய கட்டடம் அருகே உள்ள குளியல் அறை மற்றும் கழிப்பறையை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இந்த கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரும் பயன்படுத்தாமல் பூட்டியே உள்ளதால் அரசு பணம் வீணாகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம், ஊராட்சி சேவை மைய கட்டடத்தை உரிய முறையில் பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர, ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.