/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை போலீஸ்காரர் கைது
/
கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை போலீஸ்காரர் கைது
ADDED : அக் 09, 2024 11:51 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில், கடந்த ஏப்ரல் மாதம், 18ம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வந்த, வால்பாறை பகுதியை சேர்ந்த விவேக், 26, திருச்சி பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், 35, ஆகியோரை கைது செய்தனர்.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், இருவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் கஞ்சா விற்பனை செய்த லட்சுமிபிரியா, 35, என்ற பெண்ணையும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆதீஸ்வரன் என்ற சிவா, 30, என்பவரையும் கைது செய்தனர்.
இதில் சிவாவிடம் மேற்கொண்ட விசாரணையில், பழனியில் உள்ள, 14வது பட்டாலியன் தமிழக சிறப்பு படை காவலர் பிரகாஷ், 27 என்பவர் சிவாவிடம் பணம் கொடுத்து ஆந்திராவில் கஞ்சா வாங்கி வர சொன்னது தெரிந்தது.
இதையடுத்து, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த காவலர் பிரகாஷை, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.
இவர் வங்கியில், 2.30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கஞ்சா விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். கஞ்சா கடத்தல் வழக்கில் போலீசார் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

