/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாமல்லை - காட்டுப்பள்ளி துறைமுக சாலை பணி மண், நிலக்கரி சாம்பல் தட்டுப்பாடால் தாமதம்
/
மாமல்லை - காட்டுப்பள்ளி துறைமுக சாலை பணி மண், நிலக்கரி சாம்பல் தட்டுப்பாடால் தாமதம்
மாமல்லை - காட்டுப்பள்ளி துறைமுக சாலை பணி மண், நிலக்கரி சாம்பல் தட்டுப்பாடால் தாமதம்
மாமல்லை - காட்டுப்பள்ளி துறைமுக சாலை பணி மண், நிலக்கரி சாம்பல் தட்டுப்பாடால் தாமதம்
ADDED : டிச 17, 2024 12:40 AM
சென்னை,
சென்னை, எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்திற்காகவும், பயணியர் போக்குவரத்திற்காகவும், மாமல்லபுரம் - காட்டுப்பள்ளி இடையே 132 கி.மீ.,க்கு சாலை அமைக்க, மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு, 'சென்னை எல்லை சாலை' திட்டம் என, பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக, காட்டுப்பள்ளி முதல் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தச்சூர் கூட்டுச்சாலை வரையும், இரண்டாம் கட்டமாக தச்சூர் கூட்டுச்சாலை முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரையும், உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.
இதில், பல இடங்களில் மேம்பாலங்கள், 18 இடங்களில் சுரங்க பாதைகள் கட்டப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்தி, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கு முதற்கட்டமாக 2,122 கோடி ரூபாயை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை பணிக்கு, 175 ஏக்கர் அரசு நிலம், 449 ஏக்கர் தனியார் நிலம் கையப்படுத்தப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது.
இதில், உயர்மட்ட சாலை அமைப்பதற்கு வண்டல் மண், களிமண், செம்மண் ஆகியவை அதிகளவில் தேவை.
இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கரை மற்றும் பாலவாக்கம் ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மழையால் ஏரிகளில் நீர் தேங்கியதால், அதிகளவில் மண் எடுக்க முடியவில்லை.
இப்பணிகளுக்கு எண்ணுார், வல்லுார் அனல் மின் நிலையங்களில் இருந்து நிலக்கரி சாம்பல் பெறுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சொந்த பயன்பாட்டிற்கு அவை பயன்படுத்தப்படுவதால், சாலை பணிக்கு கிடைக்கவில்லை.
முதற்கட்ட சாலை பணிகளை, ஜனவரி மாதம் முடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. மண் மற்றும் நிலக்கரி சாம்பல் தட்டுப்பாடு காரணமாக பணிகள் தாதமாகி வருகிறது.

