/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜி.ஹெச்.,சில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
ஜி.ஹெச்.,சில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஜி.ஹெச்.,சில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஜி.ஹெச்.,சில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : மே 14, 2025 02:07 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சதிஷ்குமார், 35. இவருக்கு மீஞ்சூர் வ.உ.சி., தெருவை சேர்ந்த ஜோதி என்ற மாதுரி, 30 என்பவர்அறிமுகம் ஆனார். மாதுரி தன்னை சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவ மனையில், டீனுக்கு உதவி யாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துஉள்ளார்.
அங்கு பல பணியிடங் கள் காலியாக இருப்பதாகவும், அது தொடர்பாக படித்தவர்கள் இருந்தால் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய சதிஷ்குமார், தன் மனைவிமற்றும் உறவினர்கள் என 25 பேருக்கு வேலை பெற்று தருவதற்காக, கடந்த, 2023ல், வேலைக்கு தகுந்தது போல், 50,000 ரூபாய், 1லட்ச ரூபாய் என பல்வேறு தவணைகளில் 10.26 லட்சம் ரூபாயை மாதுரிக்கு 'ஜிபே' வாயிலாக அனுப்பி உள்ளார்.
இரண்டு ஆண்டுகளாகியும் வேலை பெற்றுத் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றிவந்தார். அதையடுத்து சதிஷ்குமார், ஜன.7ல், ஆவடி கமிஷனரகத்தில் புகார் தெரிவித்தார்.
ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்பிடி, வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் மாதுரி தலைமறைவானார்.
போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று மீஞ்சூரில் பதுங்கி இருந்த மாதுரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.