/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
/
மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
ADDED : ஏப் 16, 2025 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், நேற்று திருத்தணி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திருத்தணி காந்திரோடு இரண்டாவது தெருவைச் சேர்ந்த முரளி, 39, என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், முரளியை கைது செய்து விசாரிக்கின்றனர்.