/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாசில்தார் ஜீப் மீது அமர்ந்து 'ரீல்ஸ்' வெளியிட்டவர் கைது
/
தாசில்தார் ஜீப் மீது அமர்ந்து 'ரீல்ஸ்' வெளியிட்டவர் கைது
தாசில்தார் ஜீப் மீது அமர்ந்து 'ரீல்ஸ்' வெளியிட்டவர் கைது
தாசில்தார் ஜீப் மீது அமர்ந்து 'ரீல்ஸ்' வெளியிட்டவர் கைது
ADDED : ஜூன் 30, 2025 11:21 PM

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி தாசில்தார் ஜீப் மீது அமர்ந்து, 'ரீல்ஸ்' வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்குமார் பயன்படுத்தும் ஜீப், ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலக வாசலில் நிறுத்தப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் தாசில்தார் அலுவலகம் முன் ஜீப் நின்றிருந்த போது, வாலிபர் ஒருவர், ஜீப் மீது அமர்ந்து சினிமா டயலாக் ஒன்றுக்கு வீடியோ எடுத்து, அதை அவரது 'வாட்ஸாப் ஸ்டேட்டசில்' வைத்திருந்தார். அந்த வீடியோ நேற்று வைரலாக பரவியது.
இதுகுறித்து எளாவூர் வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, வீடியோ எடுத்த வாலிபர் தேவநாதன், 28, என்பவரை கைது செய்தனர்.
அவர், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
அடிக்கடி சினிமா டயலாக்கை வைத்து வீடியோ எடுத்து 'வாட்ஸாப் ஸ்டேட்டஸ்' வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அவருக்கு விடுமுறை என்பதால், தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தாசில்தார் ஜீப் மீது அமர்ந்து வீடியோ எடுத்தது தெரியவந்தது.