/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 08:10 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த கொல்லமதராபுரத்தைச் சேர்ந்தவர் டில்லி, 89. நேற்று முன்தினம் இவரது மனைவி லட்சுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆம்புலன்சும் கொல்லமதுராபுரம் கிராமத்திற்கு வந்தது. ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த சோமம்மாள், 60, மற்றும் அவரது மகன் நாகேஷ், 36, ஆகியோர் ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடாமல் தடுத்துள்ளனர்.
இதையடுத்து, லட்சுமியை கட்டிலில் படுக்க வைத்து, ஊருக்கு வெளியே துாக்கி வந்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், சோமம்மாள் மற்றும் நாகேஷ் ஆகியோர், டில்லிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து விசாரித்த ஆர்.கே.பேட்டை போலீசார், நாகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.