ADDED : மே 29, 2025 08:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியைச் சேர்ந்தவர் வேல்முருகன், 43. இவரது வீட்டில் கட்டுமான பணிக்காக இரும்பு தகடுகள் வைத்திருந்தார்.
கடந்த 25ம் தேதி இரவு ஆறு இரும்புத்தகடுகள் மாயமானது.
வேல்முருகன் அளித்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வேல், 22, மற்றும் யுவராஜ், 22, ஆகியோர் இரும்பு தகடுகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, வேல் என்பவரை கைது செய்த போலீசார், இரும்புத் தகடுகளை மீட்டனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.