/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவருக்கு 'கம்பி'
/
முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவருக்கு 'கம்பி'
ADDED : ஆக 22, 2025 02:28 AM

மப்பேடு:மப்பேடு அருகே, முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மப்பேடு அடுத்த நரசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி, 34. இவர், கடந்த 10ம் தேதி, தன் வீட்டருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார், 24, என்பவருக்கும் ராஜிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அஜீத்குமார், தன் நண்பரான சந்தியப்பன், 23, என்பவருடன் ராஜி வீட்டிற்குச் சென்று, ஆபாசமாக பேசி இரும்பு குழாயால் தாக்கியுள்ளார்.தடுக்க வந்த ராஜியின் பெற்றோரையும், ஆபாசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த மப்பேடு போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர். பின், அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.