/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விபத்தில் மேலாளர் படுகாயம்
/
சாலை விபத்தில் மேலாளர் படுகாயம்
ADDED : மே 05, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 34. இவர், பொன்பாடி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றவர், இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
திருத்தணி புதிய பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், பிரசாந்த் பலத்த காயமடைந்தார். பின், திருவள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.