UPDATED : நவ 16, 2026 08:00 PM
ADDED : நவ 16, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: சுண்ணாம்புகுளத்தில், வரும் 25ம் தேதி, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், எளாவூர் குறுவட்டம், சுண்ணாம்புகுளம் கிராமத்தில், வரும் 25ம் தேதி காலை 10:00 மணியளவில், கலெக்டர் கவிதா தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில், அனைத்து துறையை சார்ந்த, மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
