/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் - பைக் மோதல் மெக்கானிக் உயிரிழப்பு
/
கார் - பைக் மோதல் மெக்கானிக் உயிரிழப்பு
ADDED : ஜூலை 13, 2025 10:41 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே பைக் மீது எதிரே வந்த கார் மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த வரதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன், 45; மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் காலை, தன் மகனை டியூஷன் அழைத்து செல்வதற்காக, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
குப்பம்மாள் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த பொலிரோ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் படுகாயமடைந்த பலராமன் சம்பவ இடத்திலேயே பலியானர்.
இவரது மகன் படுகாயங்களுடன், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.