/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுார் விரைவு சாலையில் 'மீடியன்' அமைப்பு
/
எண்ணுார் விரைவு சாலையில் 'மீடியன்' அமைப்பு
ADDED : ஜன 30, 2024 01:42 AM

திருவொற்றியூர் : எண்ணுார் - பாரதியார் நகரில் இருந்து திருவொற்றியூர் - சுங்கச்சாவடி வரையிலான, 5 கி.மீ., துார எண்ணுார் விரைவு சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
மாதவரம், மீஞ்சூர், மணலி, மணலிபுதுநகர், விச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து, சென்னை துறைமுகம் நோக்கிச் செல்லும் கன்டெய்னர் லாரிகளுக்கு எண்ணுார் விரைவுச் சாலையே பிரதானம்.
இச்சாலையில், இரு பிரதான சாலைகள், இரு அணுகுசாலைகள் என நான்காக பிரிக்கும் வகையில், கான்கிரீட்டால் கட்டப்பட்ட சென்டர் மீடியன்கள் இருந்தன.
காலப்போக்கில், மழைநீர் வடிகால், வாகன போக்குவரத்து போன்ற வசதிக்காக, ஆங்காங்கே சென்டர் மீடியன்கள் இடிக்கப்பட்டு, சாலையை கடக்கும் வகையில் வழிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதனால், ஆங்காங்கே திடீரென தெருக்களில் இருந்து எண்ணுார் விரைவுச் சாலைக்குள் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கின. 'சென்டர் மீடியன்' சேதமடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக, ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், வார்டு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, சேதமடைந்த இடங்களில் சென்டர் மீடியன்களை சீரமைக்கும் பணியை தற்போது நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது.