/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
/
மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
ADDED : அக் 30, 2024 06:31 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், நவ., 20ம் தேதி வரை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், பிறப்பு முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவ மதிப்பீட்டு முகாம், கடந்த 30ல் துவங்கி நவ., 20 வரை நடக்கிறது.
இம்மருத்துவ முகாமில், அனைத்து ஒன்றியங்களுக்கும் உட்பட்ட மாற்றுத்திறனாளிகள், நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு மற்றும் அடையாள அட்டை நகலுடன் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடம்
நாள் ஒன்றியம் இடம்
நவ., 4 பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பூண்டி.
5 ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.கே.பேட்டை.
6 திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், திருவள்ளூர்.
7 கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மிடிப்பூண்டி.
8 பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி
12 எல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியபாளையம்
13 திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி
14 பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம், பள்ளிப்பட்டு
15 சோழவரம், புழல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சோழவரம்
16 கடம்பத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடம்பத்துார்
19 திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாலங்காடு
20 மீஞ்சூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னேரி.